ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை

கடந்த ஆண்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோ (Robert Fico) மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஸ்லோவாக்கியா (Slovakia) நீதிமன்றம் “பயங்கரவாத தாக்குதல்” குற்றத்திற்காக குற்றவாளி என தீர்ப்பளித்து 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பான்கா (Banská ) பைஸ்ட்ரிக்காவில் (Bystrica)உள்ள சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் 72 வயதான ஜூராஜ் சின்டுலாவை (uraj Syndula) குற்றவாளி எனத் தீர்ப்பளித்து தண்டனை விதித்துள்ளது.
மேற்கு ஸ்லோவாக்கியாவின் லெவிஸைச் (Levice) சேர்ந்த கவிஞர் சின்டுலா, 2024ம் ஆண்டு மே 15ம் திகதி மத்திய ஸ்லோவாக்கியாவில் நடந்த அரசாங்கக் கூட்டத்தில் இருந்து பிரதமர் வெளியேறும்போது தாக்குதல் நடத்தினர்.
முதலில் வழக்குரைஞர்கள் ஜூராஜ் சின்டுலா மீது திட்டமிட்ட கொலைக் குற்றம் சாட்டினர், ஆனால் பின்னர் அவர்கள் துப்பாக்கிச் சூட்டை “பயங்கரவாத தாக்குதல்” என்று மறுவகைப்படுத்தினர்.