டெல்லியில் குடும்பத்தினரை கொன்று காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
டெல்லியில்(Delhi) நபர் ஒருவர் வீட்டில் தனது தாய், சகோதரி மற்றும் சகோதரனை மூச்சுத் திணறடித்து கொலை செய்துவிட்டு பின்னர் காவல் நிலையத்திற்குள் சென்று சரணடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட யஷ்வீர் சிங்(Yashvir Singh), காவல் நிலையத்திற்குச் சென்று இந்த கொடூரமான குற்றம் குறித்து தெரிவித்ததாக டெல்லியின் கிழக்கு மாவட்ட துணை காவல் ஆணையர் அபிஷேக் தானியா(Abhishek Thania) குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் தனது 12 வயது சகோதரர், 26 வயது சகோதரி மற்றும் 45 வயதுடைய அவரது தாய்க்கு போதைப் பொருளைக் கொடுத்துள்ளார்.
அவர்கள் மயக்கமடைந்த பிறகு மூவரையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு பின்னர் சரணடைந்துள்ளார்.
இந்த படுகொலைக்கு முக்கிய காரணம் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் தான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் அதிக அளவு கடன்களை வாங்கியதாகவும் அதை அவரால் திருப்பிச் செலுத்த முடியாததால் மிகுந்த மன அழுத்தத்தின் கீழ் அவர் தனது குடும்பத்தினரைக் கொலை செய்துள்ளார் என்று காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.





