கடவுச்சீட்டின்றி ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணித்தவருக்கு 5 வருட சிறைத்தண்டனை
டென்மார்க்கிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்குப் பயணம் மேற்கொண்ட Sergey Ochigava என்பவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடவுச்சீட்டு, பயணச் சீட்டு, விசா எதுவுமின்றி பயணம் மேற்கொண்டதற்கான குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
46 வயது ஒச்சிகாவா ரஷ்யாவைச் சேர்ந்தவர் எனவும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் அவர் விமானத்தில் மறைந்திருந்து பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விமானம் நவம்பர் 4ஆம் தேதி லாஸ் ஏஞ்சலிஸில் தரையிறங்கியதும் ஒச்சிகாவாவிடம் கடவுச்சீட்டு, பயணச் சீட்டு, விசா ஆகிய ஏதுமில்லை என்பது தெரியவந்தது.
அவரிடம் இஸ்ரேலிய, ரஷ்ய அடையாள அட்டைகள் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்காவிற்குச் செல்லும் விமானத்தில் ஏறியது குறித்துத் தமக்கு நினைவில்லை என்றும் 3 நாளாகத் தூங்கவில்லை என்றும் ஒச்சிகாவா கூறியிருந்தார்.
அடுத்த மாதம் 5ஆம் திகதி அவருக்குத் தண்டனை விதிக்கப்படும் எனவும் ஒச்சிகாவாவுக்கு 5 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.