ஜெர்மனியில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஜெர்மனியில் பொலிஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபருக்கு இன்று (16.09) நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மே 31, 2024 அன்று நடந்த கத்திகுத்து தாக்குதலில் 29 வயதுடைய ரூவன் லார் என்ற பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார்.
ஜெர்மன் தனியுரிமை விதிகளின்படி சுலைமான் என அடையாளம் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தாக்குதல் நடந்தபோது 25 வயதாக இருந்த ஆப்கானிஸ்தான் குடிமகன் சுமார் ஒரு தசாப்த காலமாக ஜெர்மனியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கு விசாரணையின்போது இஸ்லாமிய அரசு குழுவின் சித்தாந்தத்துடன் அடையாளம் காணப்பட்டார் என்பதற்கான ஆதாரங்களை வழக்கறிஞர்கள் சமர்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)