துபாயில் இருந்து இலங்கை வந்த நபர் விமான நிலையத்தில் கைது : மீட்கப்பட்ட பொருட்கள்!

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், சுமார் 30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அதிநவீன மொபைல் போன்களை நாட்டிற்கு கொண்டு வந்த விமானப் பயணி ஒருவரை கைது செய்துள்ளனர்.
இந்த சட்டவிரோத மொபைல் போன்கள் விமான நிலையத்தின் “கிரீன் லேன்” வழியாக கொண்டு வரப்பட்டன.
சந்தேக நபர் கொழும்பு பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.
துபாயில் இருந்து நாட்டிற்கு வந்த சந்தேக நபருக்குச் சொந்தமான 3 சூட்கேஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு மாடல்களில் 111 விலையுயர்ந்த மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
(Visited 1 times, 1 visits today)