அயர்லாந்தில் ஆசிரியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை
அயர்லாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்கில் கடந்த ஆண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியரும் இசைக்கலைஞருமான, ஆஷ்லிங் மர்பி, ஜனவரி 2022 இல், கவுண்டி ஆஃப்ஃபாலியின் துல்லமோர் அருகே கால்வாயில் ஜாகிங் செய்தபோது கொலை செய்யப்பட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு வெள்ளிக்கிழமையன்று டப்ளின் மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் கட்டாய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.





