சட்ட ரீதியாக திருமணம் செய்த இளைஞனுக்கு ஜெர்மனியில் 5 வருடம் கடூழிய சிறை தண்டனை
ஜெர்மனில் எஸன் நகர மாவட்ட நீதிமன்ற தீர்ப்பானது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
22 வயதுடைய சிரியா நாட்டவருக்கு கட்டாய திருமணம் செய்துள்ளார் என்ற நிலையில் ஐந்த வருடம் கடூழிய சிறை தண்டனையை எஸன் நகர மாவட்ட நீதிமன்றமானது விதித்தது இருந்தது.
22 வயதுடைய நபரின் தமையனான 33 வயதுடைய நபர் ஜெர்மனியில் இருந்து சிரியா நாட்டுக்கு சென்று 22 வயதுடைய சகோதரனுக்கு 12 வயதுடைய சிறுமியை திருமணம் செய்வதற்காக அழைத்து வந்துள்ளார்.
சிறுமிசட்ட ரீதியாக திருமணம் செய்து நாட்டுக்கு வந்துள்ளார் . ஜெர்மன் நாட்டின் சட்டங்களுக்கு அமைய 12 வயதுடைய சிறுமியை திருமணம் செய்வது என்பது சட்டத்தில் விலக்கப்பட்டதாகும்.
இந்நிலையில் 22 வயதுடைய நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 33 வயதுடைய சகோதரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றமானது வழக்கை விசாரித்த பின்னர் 33 வயதுடைய நபருக்கு தண்டனை வழங்க வில்லை என தெரியவந்துள்ளது.