இலங்கையில் தோல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டடு வந்தவர் எரித்து படுகொலை

தோல் பொருட்கள் தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்டு, புளத்சிங்கள-நாகஹதொல துணைப் பாதையில் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புளத்சிங்கள-யடகம்பிட்டி-நாகஹதொல-யோதகந்த துணைப் பாதையில் அடையாளம் காணப்படாத ஒருவரின் அரை எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்றதாக புளத்சிங்கள பொலிஸ் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் பாதுக்க, மஹிங்கல பகுதியைச் சேர்ந்த அமரசிங்க பந்துல கீதானந்த அமரசிங்க (47) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர் தோல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
(Visited 1 times, 1 visits today)