மியன்மார் மற்றும் தாய்லாந்து எல்லைக்கு அருகே மனித கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது!
மியான்மர் மற்றும் தாய்லாந்து எல்லைகளுக்கு அருகே ஆன்லைன் மோசடி வலையமைப்புகளுடன் தொடர்புடைய மனித கடத்தல் வழக்குகளில் ஒரு முக்கிய சந்தேக நபரை சீன அதிகாரிகள் கைது செய்துள்ளதாக சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யான் என்ற குடும்பப்பெயர் கொண்ட சந்தேக நபர், தாய்லாந்தில் உள்ள சீனத் தூதரகம் மற்றும் தாய் சட்ட அமலாக்க அதிகாரிகளின் கூட்டு முயற்சிகள் மூலம் கைது செய்யப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவரிடம் மனித கடத்தல் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அண்மையில் சீன நடிகர் வாங் ஜிங் நடிப்பு வாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியால் ஈர்க்கப்பட்டு தாய்லாந்திற்கு பயணம் செய்தார்.
ஆனால் அதற்கு பதிலாக எல்லை தாண்டி மியான்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு சீன மக்களை குறிவைத்து ஒரு அழைப்பு மோசடி நடவடிக்கையில் அவர் பணியமர்த்தப்பட்டதாக போலீசார் நம்புகிறார்கள் என்று தாய் போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.