பெங்களூரு கடைக்குள் நிர்வாணமாக நுழைந்து 25 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடிய நபர்

முகத்தில் முகமூடியும் கையில் டார்ச் லைட்டும் வைத்திருந்த ஒரு திருடன், பெங்களூருவில் உள்ள ஒரு மொபைல் கடைக்குள் நிர்வாணமாக நுழைந்து பொருட்களை திருடி சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
உடைந்த சுவர் வழியாக கடைக்குள் நுழைந்த திருடன், சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்வேறு பிராண்டுகளின் 85 மொபைல் போன்களைத் திருடி தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் திருடன் கைது செய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார். உடைகள் அணியாமல் திருடிய காரணத்தை போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
(Visited 2 times, 2 visits today)