பேருந்தில் பயணித்தவருக்கு நேர்ந்த விபரீதம்!
 
																																		ரத்மலானை காலி வீதியில் நேற்று (செப். 12) பயணித்த பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்கிசை பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய நபரே மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த பயணி களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கல்கிசை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 8 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
