வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நபர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது
டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஸ்ரீதரன் நிரஞ்சன் எனப்படும் டிங்கர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளர்.
இன்று அதிகாலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபர் கொழும்பு 15 இல் வசிக்கும் 36 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான பழனி ஷிரான் குளோரியன் எனப்படும் கொச்சிக்கடை ஷிரானின் நெருங்கிய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் உள்ள மஹவத்த பொது மயானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் வந்த காரின் ஓட்டுநர் இந்த சந்தேக நபர் ஆவார்.
மேலும், 8ஆம் மாதம் 19ஆம் திகதியன்று பேலியகொட பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்ரீ ஞானரத்ன மாவத்தையில் ஒருவரை சுட்டுக் கொன்று, மற்றொரு நபரை கடுமையாக காயப்படுத்திய குற்றத்தைச் செய்ய தேவையான துப்பாக்கிகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டிற்காக அவர் தேடப்படும் சந்தேக நபராகும்.
இந்த சந்தேக நபருக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் ஒகஸ்ட் 19 ஆம் திகதி வெளிநாடு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் திமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





