ஆந்திராவில் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்
ஆந்திராவின் கோனசீமா (Konaseema) மாவட்டத்தில் 35 வயது நபர் ஒருவர் தனது இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பி.காமராஜு என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் சில நபர்களால் துன்புறுத்தப்பட்டு வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
“காமராஜு சிலரால் துன்புறுத்தப்பட்டு வருவதாக எங்களுக்கு முதற்கட்ட தகவல் உள்ளது. அவரது மனைவியும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சில தகராறுகளுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டார்,” என்று காவல்துறை அதிகாரி ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காமராஜுவின் தற்கொலைக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.





