பாகிஸ்தானில் சிறு தகராறில் மனைவியின் காலை வெட்டிய நபர்

ஒரு சிறிய தகராறில் தனது மனைவியின் காலை வெட்டியதாகக் கூறப்படும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மசார் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர், அவர் குடும்ப தகராறில் தனது 22 வயது மனைவி இக்ரா பீபி என்பவரை படுகாயப்படுத்தினார்.
சந்தேக நபர் தனது மனைவியைக் கட்டி வைத்து, இறைச்சி வெட்டும் கத்தியால் அவரது காலை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சந்தேக நபரைக் கைது செய்ய ஒரு தேடுதல் தொடங்கப்பட்டது.
பின்னர் சந்தேக நபர், அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து, போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் காயமடைந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
(Visited 1 times, 1 visits today)