ஒடிசாவில் 4 பசுக்கள் மீது ஆசிட் வீசிய நபர் மீது வழக்குப்பதிவு
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில், வீட்டிற்கு வெளியே மேய்ந்து கொண்டிருந்த நான்கு மாடுகள் மீது ஆசிட் வீசியதாக ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
காந்தி நகரில் நடந்த ஆசிட் தாக்குதலில் பசுக்கள் பலத்த தீக்காயமடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
“குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது BNS மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்” என்று பெர்ஹாம்பூர் டவுன் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் சவுபாக்ய குமார் ஸ்வைன் தெரிவித்துள்ளார்.
மாடுகள் தனது வீட்டின் பச்சை வேலியை அழித்து வருவதால் குற்றம் சாட்டப்பட்டவர் முன்பு மிரட்டியதாக மாடுகளின் உரிமையாளர் குற்றம் சாட்டினார்.
காயமடைந்த பசுக்கள் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.





