ஜரோப்பிய நாடுகளில் தாக்குதல் நடத்த சதி திட்டம் – ஜெர்மனியில் பிடிபட்ட நபர்!
ஜேர்மனியின் செக் (Czech) எல்லைக்கு அருகில் ஹமாஸ் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் நாட்டிற்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டதாக வழக்குறைஞர்கள் நேற்று தெரிவித்துள்ளனர்.
லெபனானில் பிறந்த குறித்த நபர் ஜெர்மனியிலும் ஐரோப்பாவின் பிற இடங்களிலும் உள்ள இஸ்ரேலிய அல்லது யூத தளங்களைத் தாக்குவதற்காக ஆயுதங்களைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக வழக்குறைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேக நபர் கார்ல்ஸ்ரூஹேவுக்கு (Karlsruhe) மாற்றப்படவுள்ளதாகவும், காவலில் வைக்கப்படுவாரா என்பதை தீர்மானிக்க நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நபர் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேர்லினில் (Berlin) ஒரு தானியங்கி ஆயுதம், எட்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட தோட்டாக்களை வாங்கியதாக நம்பப்படுகிறது.
குறித்த ஆயுதங்களை அவர் பிறிதொரு நபருக்கு கைமாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பல கைது நடவடிக்கைகளை முன்னெடுத்ததை தொடர்ந்து ஹமாஸுடன் தொடர்புடைய நெட்வொர்க்குகள் குறித்த விசாரணைகளை ஜெர்மன் அதிகாரிகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




