மட்டக்களப்பில் தொல்பொருள் தளங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகளை அகற்றிய நபர் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் தளங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு, கிரண் பகுதியில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு அகற்றப்பட்ட அறிவிப்புப் பலகைகள் வாழைச்சேனை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய வாழைச்சேனை பிரதேச சபையின் தலைவர் தலைமறைவாகியுள்ளார்.
தொல்பொருள் துறை நவம்பர் 3ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் திசை மற்றும் தகவல் பலகைகளை அமைக்கத் தொடங்கியது.
அதன் பின்னர், பிரதேச சபை ஒன்றின் அதிகாரிகளினால் இப்பலகைகள் கடந்த 22ம் திகதி அகற்றப்பட்டன.




