500 லீற்றர் மண்ணெண்ணையை பதுக்கிய நபர் கைது
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே மண்ணெண்ணெய் பதுக்க முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மண்ணெண்ணையை பதுக்க பயன்படுத்திய லொறியும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேக நபரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





