யாழில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட நபர் கைது

யாழ்.மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி ஆளில்லா கமெராவை பறக்கவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெலிப்பளை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானத்துடன் தெலிப்பளை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
(Visited 12 times, 1 visits today)