டிரம்பின் உத்தரவை எதிர்த்து அமெரிக்கக் கொடியை எரித்த நபர் கைது
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய அமெரிக்கக் கொடியை எரித்த ஒரு போராட்டக்காரர் வெள்ளை மாளிகைக்கு அருகில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அமெரிக்கக் கொடிகளை எரிப்பது அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் கூறிய போதிலும், கொடியை எரிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நீதித்துறைக்கு உத்தரவிடும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
“அந்த சட்டவிரோத பாசிச ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக நான் இந்தக் கொடியை எரிக்கிறேன்,” என்று அந்த நபர் வெள்ளை மாளிகையை ஒட்டிய லாஃபாயெட் பூங்காவில் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி என்ன சொன்னாலும் இந்தக் கொடியை எரிப்பது எங்கள் முதல் திருத்த உரிமை” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அவர் கொடியை தீயிட்டுக் கொளுத்தினார், அது விரைவாக அணைக்கப்பட்டது.





