வெளிநாடு செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடைய தம்ரோவத்த, குளிகொட பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு மற்றும் 5 கிராம் 430 மில்லிகிராம் ஹெராயின் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(Visited 46 times, 1 visits today)





