47 அரிய பாம்புக்களை கடத்தி செல்ல முற்பட்ட நபர் இந்திய விமான நிலையத்தில் கைது!
விஷ பாம்புகள் உட்பட டஜன் கணக்கான அரிய ஊர்வனவற்றை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக இந்திய அதிகாரிகள் ஒருவரை கைது செய்துள்ளனர்.
தாய்லாந்திலிருந்து திரும்பி வந்த இந்திய குடிமகன் மும்பை நகர விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது 47 விஷ விரியன் பாம்புகள் உட்பட ஊர்வன அந்த நபரின் உடைமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.
இந்தியாவில் பல்வேறு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணியின் பெயர் மற்றும் அவர் காவலில் உள்ளதால் பெயர் குறிப்பிடப்படவில்லை. அவர் கைது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.





