அமெரிக்காவில் ஏழு பிட் புல் நாய்களால் தாக்கப்பட்டு ஆண் மற்றும் 3 மாத குழந்தை மரணம்
டென்னசியில்(Tennessee) ஒரு ஆண் மற்றும் அவரது 3 மாத பேத்தி ஏழு பிட் புல்(pit bulls) நாய்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தி நியூயார்க் போஸ்ட்(The New York Post) செய்தி வெளியிட்டுள்ளது.
50 வயதான ஜேம்ஸ் அலெக்சாண்டர் ஸ்மித்(James Alexander Smith) மற்றும் குழந்தை துல்லாஹோமாவில்(Tullahoma) உள்ள அவர்களின் வீட்டில் இறந்து கிடந்துள்ளனர்.
இந்நிலையில், காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்த போது குழந்தை தாக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் பாதிக்கப்பட்டவர்களை அடைய ஏழு பிட் புல் நாய்களையும் சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறுதியில் நாய்களைத் தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களை அடைய முடிந்த நேரத்தில் கடுமையான காயங்களுக்கு ஆளாகியிருந்ததால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.





