காசாவில் அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாடு – 24 மணிநேரத்தில் 08 பேர் பலி!
கடந்த 24 மணி நேரத்தில், காசா பகுதியில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளனர்.
அதன்படி, இதுவரை 281 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதைய சூழ்நிலை காரணமாக காசா பகுதியில் ஏராளமான மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதற்கிடையில், அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களால் 63,300 காசா மக்கள் இறந்துள்ளனர்.





