இந்தியா வந்தடைந்த மாலத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு
மாலத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு, கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், தனது முதல் இந்தியா விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது அவர் தாயகத்தில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்துடன் இராஜதந்திர உறவுகளை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
புது தில்லி வந்த மொஹமட் முய்ஸு மற்றும் முதல் பெண்மணி சஜிதா மொஹமட் , தனது ஐந்து நாள் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற மூத்த இந்திய அதிகாரிகளைச் சந்திக்க உள்ளனர்.
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்துவார்கள் என்று ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)





