ஆசியா

மாலதீவு – அமெரிக்க டொலருக்கு பதிலாக உள்நாட்டு கரன்சிகள் ; OK சொன்ன இந்தியா,சீனா

இந்திய மற்றும் சீன நாடுகளின் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. அந்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிபராக மீண்டும் முகம்மது முய்சுவே வெற்றிபெற்றுள்ளார். சீனாவின் ஆதரவு நிலைபாட்டைக் கொண்டிருக்கும் முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில், ‘இந்திய ராணுவ வீரர்கள் மே மாதம் 10ஆம் திதகதிக்குள் அந்நாட்டைவிட்டு வெளியேறியாக வேண்டும்’ என காலக்கெடு விதித்திருந்தார்.

அதன்படி, இந்திய ராணுவ வீரர்களும் அந்நாட்டைவிட்டு வெளியேறினர். இதைத் தொடர்ந்து, ‘இந்தியா வழங்கிய விமானத்தை இயக்கும் திறன்கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்திடம் இல்லை’ என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் காசன் மவுமூன் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மாலத்தீவு இறக்குமதி செய்யும் பொருள்களுக்கான விலையை அமெரிக்க டொலருக்கு பதிலாக உள்நாட்டு கரன்சிகளில் அளிக்க சீனா மற்றும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு, அதாவது நாட்டின் மொத்த இறக்குமதி செலவில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை சேமிக்க முடியும் என மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது.

Maldives says India and China agree to use local currencies for imports –  Firstpost

சமீபத்தில், மாலத்தீவு இந்தியாவிடம் இறக்குமதிக்கான பணத்தை இந்திய ரூபாயில் செலுத்த ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. அதற்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்தது. அதேபோல சீனாவின் வர்த்தக அமைச்சகம் மாலத்தீவு அதிபரின் கோரிக்கையை ஏற்று இறக்குமதிக்கான பணத்தை யுவானில் தர அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, மொத்த இறக்குமதி செலவில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை மாலத்தீவு சேமிக்க உள்ளது.

மாலத்தீவு இந்தியாவிடமிருந்து ஆண்டுதோறும் 780 மில்லியன் டொலர் மதிப்பிலும், சீனாவிடமிருந்து 720 மில்லியன் டொலர் மதிப்பிலும் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான சர்வதேசளவிலான வர்த்தம் அந்தந்த நாடுகளின் கரன்சிகளில் மேற்கொள்ளப்படும்போது இரு நாடுகளின் அந்நிய செலவாணி இருப்பு மிச்சமாகும். மேலும் இரண்டு நாடுகளுக்கிடையேயான சர்வதேச வர்த்தகத்தை உள்ளூர் நாணயத்தில் மேற்கொள்வதில் வெற்றிகண்டுள்ளது மாலத்தீவு.

அதேநேரத்தில், இந்தியா – மாலத்தீவு நாடுகளுக்கு இடையிலான உறவின் விரிசலுக்குப் பிறகு அந்நாட்டின் முக்கியமான கோரிக்கைக்கு இந்தியா ஒப்புதல் அளித்திருப்பது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. மேலும், இத்தகைய நடவடிக்கை, சர்வதேச வர்த்தகத்தில் மு்ன்னிலையில் உள்ள அமெரிக்காவின் டொலர் சாம்ராஜ்ஜியத்தைச் சரியவைக்கும் எனக் கூறப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்