மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்
மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா கலீல் 2025 பெப்ரவரி 18-21 வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் படி, இந்த விஜயத்தின் போது, மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை மரியாதையுடன் சந்திக்க உள்ளார்.
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் கலீலுடன் மாலைதீவின் வெளிவிவகார செயலாளர் பாத்திமத் இனியாவும் வருகை தரவுள்ளார்





