மலேசியாவில் உடல்பருமன் பிரச்சினையால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மலேசியாவில் உடல்பருமன் பிரச்சினையைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
திறக்கும் நேரத்தைக் குறைக்கும்படி பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நள்ளிரவு 12 மணியோடு கடையை மூடும்படி பினாங்குப் பயனீட்டாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இரவில் சாப்பிடுவதால் உடல்பருமன், தூக்கமின்மை, செரிமானச் சிக்கல் போன்ற பல தொல்லைகள் ஏற்படுவதாக பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மெய்தீன் அப்துல் காதர் கூறினார்.
24 மணி நேரமும் கடைதிறக்கும் உரிமத்தை அதிகாரிகள் இரத்துச் செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் 30 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் உடல்எடை பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐந்தாண்டு முன்பு நடத்தப்பட்ட தேசியச் சுகாதார ஆய்வு கூறியது.