சிங்கப்பூருக்குள் நுழைந்த பெண்ணை சுற்றிவளைத்த அதிகாரிகள் – சிக்கிய பெருந்தொகை பணம்
மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சிங்கப்பூருக்குள் நுழைந்த போது 20,000 வெள்ளிக்கும் அதிகமான ரொக்கம் வைத்திருந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
உட்லண்ட்ஸ் குடிநுழைவு சோதனைச் சாவடியில் ஏப்ரல் 25ஆம் திகதி அந்த சம்பவம் நடந்தது.
மலேசியரான அந்தப் பெண், கார் மூலம் சிங்கப்பூருக்குள் நுழையும் போது அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
பெண் ஓட்டி வந்த கார் மலேசிய வாகனப் பதிவு எண்ணைக் கொண்டது. அவர் பணத்தை பிளாஸ்டிக் பைகளில் கட்டுக்கட்டாக வைத்திருந்ததாக அதிகாரிகள் கூறினர். தற்போது பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூர் சட்டப்படி சிங்கப்பூரில் இருந்து வெளியே செல்பவர்களோ அல்லது வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைபவர்களோ 20,000 வெள்ளிக்கு அதிகமான ரொக்கம் கையில் வைத்திருந்தால் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
அப்படி மீறினால் குற்றம் செய்பவர்களுக்கு 50,000 வெள்ளி வரையிலான அபராதமோ மூன்று ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
https://web.facebook.com/Immigration.Checkpoints.Authority/posts/551296547191469