மலேசியா – அணுசக்தி பாதுகாப்பு பயிற்சியின் போது ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான பொலிஸ் ஹெலிகாப்டர்

மலேசியாவின் ஜோகூரில் உள்ள புலாய் ஆற்றில் நேற்று ஒரு போலீஸ் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமானி உட்பட ஐந்து பேரை மீட்டனர்.
அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் பயிற்சியின் போது நடந்ததாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது
(Visited 1 times, 1 visits today)