ஹைதராபாத் விமான நிலையத்தில் மலையாள நடிகர் விநாயகன் கைது
 
																																		மலையாள நடிகர் விநாயகன் ஹைதராபாத் விமானநிலைய கேட் ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரின் பேரில், RGI விமான நிலைய போலீஸாரால் நகர காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் விநாயகன் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
கொச்சியிலிருந்து ஹைதராபாத் வழியாக கோவாவுக்குப் பறந்துகொண்டிருந்த நடிகர் விநாயகன், விமான நிறுவனத்தின் கேட் ஊழியர்களிடம் தகராறு செய்து அநாகரீகமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது, அதன் பிறகு விநாயகன் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையிடம்(CISF) ஒப்படைக்கப்பட்டார்.
CISF அளித்த புகாரின் பேரில் விநாயகன் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
கொச்சியைச் சேர்ந்த விநாயகன், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்ததற்காக பரவலாகப் பாராட்டப்பட்டார்.
 
        



 
                         
                            
