200 க்கும் மேற்பட்ட பொதுத்துறை தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் உள்ள 200ற்கும் மேற்பட்ட அரச சேவை தொழிற்சங்கங்கள் நாளை (8) மற்றும் நாளை மறுதினம் (9) சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
தற்போது நிர்வாக சேவை பிரிவின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ரூ .25,000 சிறப்பு மாதாந்திர கொடுப்பனவை அரசாங்கம் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று எதிர்ப்பு தொழிற்சங்கங்கள் கோருகின்றன.
அத்துடன், இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)