சர்ச்சைக் குறிய கடற்பகுதியில் ராணுவ பயிற்சியை மேற்கொள்ளும் முக்கிய நாடுகள்!
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ராணுவ ஒத்திகையை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் முதல் கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்துகின்றன.
இதில் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சி உட்பட, தென் சீனக் கடலில் பெய்ஜிங்கின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
04 உடன்படிக்கை கூட்டாளிகள் மற்றும் பாதுகாப்பு பங்காளிகள் “அமைதியான மற்றும் நிலையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அடித்தளமாக இருக்கும் சட்டத்தின் ஆட்சியை” பாதுகாப்பதற்காக பயிற்சிகளை நடத்துகின்றனர்.
அறிக்கையில் சீனாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் வரலாற்று அடிப்படையில் சீனாவின் விரிவான உரிமைகோரல்களை செல்லாததாக்கும் 2016 சர்வதேச நடுவர் தீர்ப்பு இறுதியானது மற்றும் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளது என்று நான்கு நாடுகளும் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன
சீனா தரப்பில் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு, சீன வெளியுறவு அமைச்சகம், சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈடுபடும் இராணுவப் பயிற்சிகள் அதன் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாக எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.