ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் : முன்னாள் ஜனாதிபதி பகிரங்க கருத்து

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும், அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிட தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இது தொடர்பில் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தாலோ அல்லது உத்தரவு பிறப்பித்தாலோ அது தொடர்பான தகவல்கள் வெளியாகும்.
ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரியை இதுவரை யாரும் வெளிப்படுத்தவில்லை என்று கூறிய சிறிசேன, விவரங்களை வெளியிட தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த தகவலை கண்டிப்பாக ரகசியமாக வைத்திருப்பது நீதிபதிகளின் பொறுப்பு என்றும் கூறினார்.
(Visited 30 times, 1 visits today)