பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதினின் மரணம் குறித்து மைத்திரி கருத்து!

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார்.
வசீம் தாஜுதீன் காரில் வைத்து எரித்து கொல்லப்பட்டதாகவும், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பாக இருந்த அவரது எலும்புகளும் காணாமல்போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச குடும்பத்து இளவரசர் ஒருவரின் காதலியை தாஜுதீன் காதலிக்க முயற்சித்ததே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் கடந்த 2019ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அது தொடர்பான வழக்குக்கு எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
(Visited 17 times, 1 visits today)