இந்தியாவின் உதவி: மஹியங்கனையில் கள மருத்துவமனை ஆய்வில் உயர் ஸ்தானிகர்.
மஹியங்கனையில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நடமாடும் வைத்தியசாலையை ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (12) காலை சென்றுள்ளார்.
பேரழிவால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கம் இரண்டு நடமாடும் வைத்தியசாலைகளை செயற்படுத்த உதவியது.
அவற்றில் ஒன்று மஹியங்கனை நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று இந்த (12) நடமாடும் வைத்தியசாலையை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார்.
ஊவா மாகாண ஆளுநர் கபில ஜெயசேகர, இந்திய துணை உயர் ஸ்தானிகர் வி.எஸ். சரண்யா, மஹியங்கனை பிரதேச சபைத் தலைவர்
உபேக்ஷா விஜேதுங்க ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்துக்கொண்டனர்.
வெள்ளத்தால் சேதமடைந்த மஹியங்கனை வைத்தியசாலை மீட்டெடுக்கப்படும் வரை மஹியங்கனை நகரில் உள்ள கட்டிடமொன்றில்
அமைக்கப்பட்டுள்ள இந்த இந்திய நடமாடும் வைத்தியசாலை, இன்று (12) மாலையுடன் அதன் மருத்துவ சிகிச்சையை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது.
மஹியங்கனை வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு சிகிச்சை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




