நலம் விசாரிக்க சிறைக்குச் சென்ற மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் நேற்று (01) வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்து முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவை சந்தித்து சுகம் விசாரித்தனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியின் மிரிஹானையில் உள்ள மூன்று மாடி வீடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கட்டுகஸ்திட்ட பிரதேசத்தில் வைத்து மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கங்கொடவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
(Visited 2 times, 2 visits today)