நுவரெலியாவில் கிரிக்கெட் விளையாடிய மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மஹிந்த ராஜபக்ஷ சவால் சம்பியன்ஷிப் பாராளுமன்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று நுவரெலியா மாநகர விளையாட்டு மைதானத்தில் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மஹிந்த ராஜமக்ஷ, நுவரெலியா மாவட்ட செயலாளர், நுவரெலியா நகர பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மான உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவானோர் கலந்துகொண்ட இப்போட்டியில், நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி வெற்றிபெற்றது.
போட்டியின் நாயகனாக எம்.பி.கயாஷானும், சிறந்த கீப்பராக சி.பி.ரத்நாயக்கவும், சிறந்த துடுப்பாட்ட வீரராக எம்.பி.டபிள்யூ.டி.வீரசிங்கவும், சிறந்த பந்துவீச்சாளராக பிரேமலால் ஜயசேகரவும் தெரிவானார்கள்.
கிண்ணங்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழங்கினார். போட்டி ஆரம்பிக்கும் முன்னர் மகிந்த ராஜபக்ச கிரிக்கெட் விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.