மகிந்த, கோட்டா மற்றும் பசிலின் பிரஜா உரிமை நீக்கப்பட வேண்டும்
மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்ட 7 பேரின் பிரஜா உரிமை நீக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.
நாட்டை திவாலாக்க இவர்கள் உழைத்தார்கள் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முதற்கட்டமாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதியால் மாத்திரமே அதனைச் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவரினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் பிரஜா உரிமையை நீக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க வேண்டி இருப்பது விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாகவாகும்.
அதனை ஜனாதிபதியால் மாத்திரமே செய்ய முடியும். அதனால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு நாட்டில் இருக்கும் 220 இலட்சம் மக்கள் சார்ப்பாக ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறேன்.” அவர் கூறியுள்ளார்.