நுகேகொடை பேரணியில் மக்கள் படை திரளும்: மஹிந்த நம்பிக்கை!
நுகேகொடையில் நாளை மறுதினம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பெருந்திரளானோர் பங்கேற்பாளர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.
அரசாங்;;கத்துக்கு எதிராக நடைபெறவுள்ள மேற்படி பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்திருந்தாலும், தான் நிச்சயம் பங்கேற்பார் என மஹிந்த நேற்று அறிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காவிட்டாலும் பெருந்திரளான மக்கள் பங்கேற்பார்கள் எனவும், அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு குழுவொன்று இருக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.
(Visited 1 times, 1 visits today)




