ஜப்பானில் தொடர் நிலநடுக்கங்கள்
ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள நோடா நகருக்கு அருகே இன்று புதன்கிழமை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 19.3 கிலோமீற்றர் (சுமார் 12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன், நவம்பர் 30 ஆம் திகதி, ஜப்பானின் தெற்கு முக்கிய தீவான கியூஷுவில் அமைந்துள்ள ககோஷிமா மாகாணத்தின் டோகாரா தீவுகள் பகுதியில் மாலை சுமார் 5.12 மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ககோஷிமா மாகாணத்தில் உள்ள அகுசெகிஜிமா தீவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ஜப்பான் நில அதிர்வு தீவிர அளவுகோலில் இரண்டாம் நிலை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவுகோல் பூஜ்ஜியத்திலிருந்து ஏழு வரை வகைப்படுத்தப்படுகிறது.
மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி வாடோமாரி நகரிலிருந்து வடகிழக்கில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.





