வெனிசுலாவில் அவசரக்காலச் சட்டத்தில் கையெழுத்திட்ட மதுரோ!
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்களை தொடங்கியுள்ள நிலையில், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) அவசரகாலச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
கராகஸ் (Caracas) மற்றும் மிராண்டா (Miranda), அரகுவா (Aragua) மற்றும் லா குய்ரா ( La Guaira) மாநிலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெனிசுலாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக ட்ரம்ப் பலமுறை கூறியிருந்தாலும், தற்போதைய தாக்குதலுக்கான காரணம் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
வெனிசுலா மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா – ஐ.நா அவசர கூட்டத்திற்கு அழைப்பு!





