செய்தி விளையாட்டு

29 வயதில் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான மேடிசன் கீஸ்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

மெல்போர்ன் பார்க் மைதானத்தில் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை எதிர்கொண்டார் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்.

முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கீஸ் கைப்பற்றினார். ஆனால் இரண்டாவது செட்டை அரினா 6-2 என வென்றார்.

எனினும் விடாப்பிடியாக ஆடி நெருக்கடி கொடுத்த கீஸ், மூன்றாவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

இதன்மூலம் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று மேடிசன் கீஸ் சாதனை படைத்தார்.

தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வென்றுள்ள கீஸ், 2005ஆம் ஆண்டு செரீனாவுக்கு பிறகு முதல் இரண்டு இடங்களில் உள்ள வீராங்கனைகளை வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் பெருமையை பெற்றுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!