பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் மக்ரோன் பின்னடைவு
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் தீவிர வலதுசாரி தேசியக் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (31) நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் மரீன் லு பென்னின் தேசியக் கட்சி பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றியதையடுத்து, அக்கட்சியின் ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வெற்றியைக் கொண்டாடியதைக் காணமுடிந்தது.
மரீன் லு பென்னின் தேசியக் கட்சி மொத்த வாக்குகளில் 33.2% வாக்குகளைப் பெற முடிந்தது, அதே நேரத்தில் இடது கூட்டணி 28.1% வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கூட்டணி 21% வாக்குகளைப் பெற்று பின்தங்கியுள்ளதாக முடிவுகள் காட்டுகின்றன.
இருப்பினும், தீவிர வலதுசாரி தேசியக் கட்சி இதற்கு முன்பு பிரெஞ்சு நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் வெற்றி பெற்றதில்லை.
577 இடங்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் தேர்தலில் வெற்றி பெற 289 இடங்களைப் பெற்றாலே போதுமானது.
எந்தக் கட்சியும் 50% தேர்தல் இடங்களில் வெற்றி பெறத் தவறினால், இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும், இந்த முடிவு மீண்டும் மாறும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தேர்தல் முடிவைக் கருத்தில் கொண்டு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், திடீர் தேர்தலுக்குச் சென்று நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.