பல வாரங்கள் நிச்சயமற்ற நிலைக்குப் பிறகு புதிய அரசாங்கத்தை நியமித்த மக்ரோன்
பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனின் பணியாளர் தலைமை அதிகாரி பிரான்சில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை தெரிவித்தார்.இந்த அறிவிப்பின் மூலம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அந்நாட்டில் நீடித்துவந்த அரசியல் நெருக்கடி ஓய்ந்துள்ளது.
இம்முறை பிரான்ஸ் சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் தொங்கு நாடாளுமன்றம் உருவானது.
இந்நிலையில் அதிபர் மெக்ரோன் தமது கட்சி சாராத 73 வயது மைக்கல் பார்னியரை நாட்டின் பிரதமராக அறிவித்தார்.அதையடுத்து தற்போது பிரான்சின் அமைச்சரவை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதியமைச்சராக 33 வயது ஆன்டோனியோ அர்மான்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். வெளியுறவு அமைச்சராக ஜீன் நோயல் பாரட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சராக செபாஸ்டியன் லெக்கார்னு தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.இருப்பினும் புதிய அரசாங்கம் எப்படி நிலைத்தன்மையுடன் செயல்படும், புதிய கொள்கைகளை கையாளும் என்பது குறித்து பல கேள்விகள் உள்ளதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் 2025ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தை அறிவிக்கும்போது புதிய அரசாங்கத்திற்கு கடுமையான சவால் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.