அமெரிக்க விமான நிலைய முனையத்தில் மோதிய சொகுசு கார் – 6 பேர் காயம்
அமெரிக்காவின்(America) மிச்சிகனில்(Michigan) உள்ள டெட்ராய்ட் மெட்ரோ(Detroit Metro) விமான நிலையத்தில் ஒரு முனையத்தில் வேகமாக வந்த கார் மோதியதில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
டெட்ராய்ட் மெட்ரோ விமான நிலையத்தில் உள்ள மெக்னமாரா(McNamara) முனையத்திற்குள் டெல்டா ஏர் லைன்ஸின்(Delta Air Line) சோதனை சாவடியில் மெர்சிடிஸ்(Mercedes) கார் மோதியுள்ளது
இந்நிலையில், சம்பவத்திற்கு பிறகு விபத்து நடந்த இடத்திலிருந்து ஓட்டுநர் இழுத்துச் செல்லப்படும்போது கூச்சலிடுவதை வீடியோ காட்டுகிறது.
காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்திலேயே தீயணைப்பு வீரர்கள் சிகிச்சை அளித்ததாக விமான நிலைய ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




