இலங்கை செய்தி

உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி – இலங்கையில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இதனால் காலநிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் அந்த அமைப்பு மெதுவாக உருவாகி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு வடக்கே தமிழக கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும்.

அதேவேளை, மத்திய, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயத்தைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை