இலங்கை

புலம்பெயரும் இலங்கை தொழிலாளர்களுக்கு குறைந்த விலை விமான டிக்கட்

புலம்பெயரும் இலங்கை தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் விமான டிக்கட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்கான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் தலைமையில் நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

சாதாரண சந்தை விலையை விட குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள் இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் உலகின் எந்த நாட்டிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் அனைத்து தொழிலாளர்களும் இங்கு குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது சிறம்பம்சமாகும்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்