சிங்கப்பூரில் தீவிரமடையும் காதல் மோசடி – 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது
சிங்கப்பூரில் சட்டத்திற்கு புறம்பான பண பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பான சந்தேகத்தில் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் 32 முதல் 51 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் காதல் மோசடிகளிலும் ஈடுபட்டதாகவும் நம்பப்படுகிறது. அவர்கள் கைது செய்யப்பட்டதால் குறைந்தபட்சம் 115,000 சிங்கப்பூர் டொலர் பண இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோசடி கும்பலிடம் இருந்து மின்னணு சாதனங்களை பொலிஸார் கைப்பற்றினர்.
அதோடு சேர்த்து 80,600 சிங்கப்பூர் டொலர் பணத்தையும் அவர்கள் மீட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரில், 51 வயதான ஆண் மற்றும் 50 வயதுடைய பெண் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.





