“அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்” : தாய்லாந்தில் பலரின் பாராட்டை பெற்ற சிறுவன்!
தெற்கு தாய்லாந்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் அப்பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இந்த காணொளில் இடம்பெற்றுள்ள விடயம் பல தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறித்த காணொளியில் சிறுவன் ஒருவர் பேரிடருக்கும் மத்தியில் 03 பூனைகளை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றுகிறார்.
முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து செல்லும் அவர், பூனைக் குட்டிகளை மார்போடு சேர்த்து அரவணைத்து எடுத்து வந்து பாதுகாப்பான இடத்தில் இறக்கிவிடுகிறார்.
சிறுவனின் இந்த செய்கையை பாராட்டி பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
https://web.facebook.com/watch/?v=867053485508951
(Visited 1 times, 1 visits today)